கைவிரல் அசைவில்
கட்டளை இட்டாய்
கண் சிமிட்டல் வடிவில்
கட்டி அணைத்தாய்

சிரிப்பு என்னும் மந்திரத்தில்
சிதற வைத்தாய்
காதல் என்னும் கல் வைத்து
வாழ்க்கை மாளிகையை தந்தாய்

கசப்பான தருணத்திலும்
இளைப்பாற தோள் தந்தாய்
கண்டிப்புடன் என்றும்
அழகான பாதை செய்தாய்

விருந்தோம்பல் செய்கையில்
விசித்திரம் பல செய்து
விண்மீனே என்னை
வசியம் செய்தாய்

ஆசை வார்த்தை கேட்க
அன்பாய் காத்திருப்பாய்
அழகனே பெண்னே
உன் அன்பால் என்னை
அடிமை செய்தாய்

அர்த்தம் இல்லா
கோபம் கொண்டு
அவஸ்த்தை படுவாய்
ஆனாலும் மீண்டு வந்து
என்னை ஆட்கொண்டுபோவாய்

விழுகின்ற மழை துளி போல
பரவசம் அடைவாய்
பெண்னே நீ தரும் அன்பை
அறைவினாடி நான் தரும் போது!!!

இப்படிக்கு *** விக்கி (+91-9995214521)

என்னைக் கூட நானறியேன்!
உன்னை மட்டும் தான்அறிவேன்!
என்னில் வந்த நாள்முதலாய்
என் னறிவாய் ஆகிப்போனாய்!

கண்ணில்கூட காதல் சொன்னாய்!
என்னில்கூட பாசம் தந்தாய்!
பெண்ணே உந்தன் காதல்முன்பு
எந்தன் காதல் மண்டியிடும்!

வண்ணம் தந்து வாசம்தந்து
என்னைமாற்றி என்னை தேற்றி
உன்னில் என்னை மூழ்கடித்தாய்!
என்னை அன்பால் நோகடித்தாய்!

காதல் நோயில் மாட்டிக்கொண்டேன்!
கனவில் உன்னை மட்டும்கண்டேன்!
காதல் தந்த சுவாசக்காற்றால்
கால மெல்லாம் மகிழ்ந்திருப்பேன்!!!